
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்களது கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 25-ஆம் தேதி) ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி மற்றும் ‘சர்கார்’ படக்குழுவினர் கலந்து கொண்டனர்.






