Spotlightசினிமா

தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு 10 மாடி வணிக வளாகம் – பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளுக்கு திட்டம்

தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்களின் சங்கம் மற்றும் ட்ரஸ்ட், தனது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய 10 மாடி வணிக வளாகம் அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் இந்த பிரமாண்ட வணிக வளாகத்தை அமைப்பதற்காக ‘மாயா பஜார் ஹப்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையின் பயன்பாட்டிற்குத் தேவையான பல்வேறு நவீன வசதிகளுடன் இந்த வளாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டிடத் திட்டத்திற்கான நிதியை திரட்டும் வகையில் சென்னை, ஹைதராபாத், குஜராத், சிங்கப்பூர் மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் தமிழ் திரையுலக இசையமைப்பாளர்கள் சங்கத்திற்காக பங்கேற்று ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் முக்கிய இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் சென்னையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான அனுமதி மற்றும் தமிழக அரசின் ஆதரவைப் பெற முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை அணுகுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் சிறப்பாக நடைபெற தமிழக அரசு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button