Spotlightசினிமா

‘ஒரு பேயை கடத்திய மனிதன்’ – ஃபஹத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ அக்டோபர் 2 ரிலீஸ்!

அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா, எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடித்துள்ள திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் படத்தை வெளியிடுகிறார்.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா, ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய ராஜமௌலி, “ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை” என்ற ஒற்றை வரி கதையே தன்னை உடனடியாக கவர்ந்ததாக தெரிவித்தார். ஃபஹத் பாசில் மற்றும் சாராவின் நடிப்பு படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என்றும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும் என்றும் கூறினார்.

ஃபஹத் பாசில் பேசுகையில், இதுவரை இப்படிப்பட்ட கதையையோ கதாபாத்திரத்தையோ தான் சந்தித்ததில்லை என்றும், படம் ரசிகர்களை சிரிக்கவும் நெகிழவும் வைக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூர்யா, ஃபஹத் பாசில்–ராஜமௌலி–கார்த்திகேயா கூட்டணி எதிர்பாராத புதிய முயற்சி என பாராட்டினார். மேலும், குழந்தைகளும் குடும்பத்தினரும் இணைந்து ரசிக்கக்கூடிய திரைப்படங்கள் அதிகம் உருவாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஃபேண்டஸி, மேஜிக், சாகசம் மற்றும் எமோஷன் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button