
2019 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கூடுதலாக 30 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு அதில் இருந்து கூடுதலாக 30 ஆயிரம் பேர் செல்வதற்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு கூடுதலாக 1000 பேர் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்காக சவுதி அரசிடம் பேசி 30 ஆயிரம் பேர் கூடுதலாக செல்வதற்கான வாய்ப்பை மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மேற்கொண்டார்.
இதையடுத்து இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் அதன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் டெல்லியில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அபூபக்கர் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தார்.
21 விமான நிலையங்களில் இருந்து சுமார் 500 விமானங்கள் மூலம் இந்தியர்கள் ஹஜ் செல்வதற்கான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வருவதற்கும் அசோசியேஷன் சார்பில் அபூபக்கர் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் மத்திய அமைச்சருக்கு தெரிவித்தார்.





