Spotlightசினிமா

நல்ல மனம், வெள்ளை குணம்; எம் ஜி ஆர் போல் உதவும் குணம் படைத்த அம்சவர்தன்!

றைந்த பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் தான் அம்சவர்தன். இவர் தமிழில் புன்னகை தேசம் , ஜூனியர் சீனியர் , பிறகு, மந்திரன் போன்ற பல படங்களில் நடித்தவர்.

எப்போதுமே சமூக நலனில் அக்கறை கொண்டவரான இவர், பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கியது முதல் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது வரை இவரது சேவைகளை பட்டியலில் அடக்கி விட முடியாது.

எந்த உதவியையும் செய்தாலும் அதை விளம்பரப்படுத்தாமல் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர் இவர்.

தற்போதுகூட கரூர் அருகே உள்ள குளித்தலை ஐயர் மலை என்ற ஊரில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை வழங்கியுள்ளார்.

தற்போது, தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அம்சவர்தன், இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் ’பீட்ரூ’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் மக்களுக்கு உதவிகள் செய்து வருவதில் ஒரு சில நடிகர்களே மனம் இறங்கி உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வரிசையில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் போன்று எந்த விதமான பிரதிபலனும் பாராது, பிறருக்கு உதவும் நல்ல மனம் கொண்டவர் தான் இந்த அம்சவர்தன்.

Facebook Comments

Related Articles

Back to top button