
கிரிக்கெட்டில் ’கூல் கேப்டன்’ என்று செல்லமாக அழைக்கப்படுவர் தல எம் எஸ் தோனி. சிரித்த முகத்துடன் இன்முகமாய் அனைவரிடமும் பழகக்கூடியவர்.
தற்போது ஐபிஎல் சீசன் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடி வருகிறார். இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் தோனி வந்து விளையாடுவதைப் பார்க்கவே, வயதான பாட்டி தன் பேத்தியுடன் போட்டியைக் காண வந்தார்.
போட்டி முடிந்த பின் தான் தோனியை சந்திக்க விரும்புவதாக அதிகாரிகளிடம் கூறினார். அதை அவர்கள் தோனியிடம் தெரிவித்தனர்.
பின்னர் தோனி பாட்டியைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.





