‘காலா’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘தலைவர் 165’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை த்ரிஷா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்காததை மட்டுமே குறையாக கருதிய த்ரிஷாவுக்கு, ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகவே இருந்தது. தற்போது அந்த கனவு நனவான மகிழ்ச்சியை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். கனவில் இருப்பது போலவே தோன்றுகிறது. எனது வட்டம் முழுமையானது என கூறியுள்ளார்.
படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
Facebook Comments