Spotlightசினிமா

”தளபதி 65: ”திட்டமிடல் இல்லாமல் பல கோடிகள் வீண்… கடுப்பான தயாரிப்பு தரப்பு!

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இப்படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார்.அனிருத் இசையமைத்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அங்கு பனிப்பொழிவு, மழை என மாறி மாறி பொழிவதால் படப்பிடிப்பில் தடை ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு நடத்த முடியால் திணறி வருகின்றனர் படக்குழுவினர். எனினும் அங்குள்ள படப்பிடிப்பை முடிக்காமல் வரமாட்டோம் என படக்குழு அங்கேயே இருக்கின்றனர்.

இதனால், படப்பிடிப்பிற்கான செலவு தொகை இழுத்துக் கொண்டே செல்கிறது. கோடிகள் சில வீணாவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சரியான திட்டமிடல் இல்லாமல் சென்றதால் தான் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் தயாரிப்பு தரப்பு கடுப்பாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button