Spotlightசினிமா

ஆர்வத்திற்கும் ஈடுபாட்டிற்கும் வயது ஒரு பிரச்சினை இல்லை :இயக்குநர் K.மகேந்திரன்

‘தண்டகன்’ பட ஆடியோ விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் நடிகை செளந்தர்யாவின் நெகிழ்ச்சிக் கதையைக் கூறினார்.

‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், மேகா பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா,நடிகை சனம் ஷெட்டி , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் .

விழாவில் படத்தின் இயக்குநர் K.மகேந்திரன் பேசும் போது “நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. சினிமாக்களை பார்த்துத்தான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன். 50 வயதுக்கு மேல் இயக்குநராக வந்திருக்கிறாரே என்று சிலர் நினைக்கலாம். ஆர்வத்திற்கும் ஈடுபாட்டிற்கும் வயது ஒரு பிரச்சினை இல்லை.

மனசுதான் முக்கியம். என் மனம் இளமையாக இருக்கிறது .என் படம் பற்றி நான் விரிவாக புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை .ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்து எடுத்திருக்கிறேன். நீங்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.” என்றார்.

இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார் வி. இளங்கோவன் ,
நாயகன் அபிஷேக் .அஞ்சு கிருஷ்ணா , ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ் ,ஆதவ், ராம் , வீரா, ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம், இசையமைப்பாளர் ஷ்யாம் மோகன், எடிட்டர் வசந்த் நாகராஜ் , சண்டைப் பயிற்சியாளர் பில்லா ஜெகன், நடன இயக்குநர் ஸ்ரீ ஷெல்லி , ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close