
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பரோட்டாவும் பத்து ரூபாய்க்கு பிரியாணியும் வழங்கப்பட்டதால் மக்கள் வெள்ளம் அலைகடலென திரண்டது.
பெரியகுளத்தில் பவளம் தியேட்டர் அருகே முரளி ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் புதிதாக ஒரு ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டுள்ளது (04/08/19). இந்த ஹோட்டலில் திறப்பு விழா சலுகையாக ஒரு பரோட்டா ஒரு ரூபாய்க்கும் ஒரு பிரியாணி பத்து ரூபாய்க்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் பிரியாணி மற்றும் புரோட்டா வாங்க அலைமோதினர்.
இதனால், அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸார் வந்து போக்குவரத்தை சீர் செய்து கொடுத்தனர்.
இது குறித்து ஹோட்டல் அதிபர் கூறியபோது, ‘ பெரிய குளத்தில் ஹோட்டல் திறக்க வேண்டும் என்று எண்ணிய போது, பொதுமக்களுக்கு நமது தரத்தை அறிய வைக்க ஒரு ஆஃபர் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒரு பரோட்டா ஒரு ரூபாய் மற்றும் ஒரு பிரியாணி பத்து ரூபாய் என்று வைத்தோ. மொத்தமாக 7 ஆயிரம் பிரியாணியும் 7 ஆயிரம் பிரியாணியும் தயார் செய்துள்ளோம்.’ என்று கூறினார்.





