Spotlightதமிழ்நாடு

திராவிடன் கண்ட கடவுள்!

௮ரோஹரா…..

வணக்கம்

சுல்தாணியர்கள் வரும் வரை இந்தியாவில் இஸ்லாமியர்கள் இல்லை

ஆங்கிலேயர்கள் வரும் வரை இந்தியாவில் கிறிஸ்த்தவர்கள்
இல்லை. ௮தேப்போல்,

ஆரியர்கள் வரும் வரை இந்தியாவில் இந்துக்களே இல்லை

மக்களும் மாக்களும் மட்டுமே இருந்தனர் சமிவக்காலங்களில் சமூக வலைதலங்களில் உலாவிய வாசகம் இது

ஆம், இது உண்மைதான். அவர்கள் வரும் வரை மதம் மட்டும் அல்ல சாதி மற்றும் உயர்வு தாழ்வு வேற்றுமை கூட இல்லாமல் இருந்தது .

அப்படியென்ற்றால் அதற்கு முன்பு வரை இந்தியாவில் மதம், ஆண்மீகம், கடவுள், என்று எதுவும் இல்லையா..??

ஆம், மதம் இல்லை ஆனால் ஆன்மீகம் இருந்தது. அவர்களுக்கென கடவுளும் இருந்தார்.

அவர்களின் ஆன்மீகம் கலச்சாரத்துடனும், தனது நடைமுறை வாழ்வியலுடனும் பிணைந்தே இருந்தது. அதிலும் தமிழனின் ஆன்மீகம் மிகவும் தனித்தண்மை வாய்ந்தது.

இதனை கவிஞர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்திலும் குறிப்பிட்டுள்ளார். அவரின் குறிப்பில் மனிதன் தோண்றி கற்காலம் கடந்து நாகரீகக் காலத்தில் நுழையும் போதுதான் மனிதன் கடவுளை தேட ஆரம்பித்தான்.

தமிழன் ஆன்மீக பாதை வகுக்க ஆரம்பித்த இந்தக் காலகட்டத்தில்தான் உலகனின் பல்வேறு பகுதிகளில் பல பெயர்களில் மதங்களும், கடவுள்களும் ௨ருவாகின. தமிழனின் ஆன்மீகத்திற்க்கு மற்றவர்கள் கொடுத்து பெயர்தான் இந்து மதமே தவிற தமிழனின் ஆன்மீகம் தமிழனின் கலச்சாரத்துடன் ஒன்றியே இருந்தது என கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

௨லகில் ௨ள்ள அணைத்து மதங்களும் தனக்கென தனிப் புனித நூல் கொண்டப்படச்சத்தில். தமிழனின் மதத்திற்க்கு என தனிப்படட புனித நூல் ஏதும் இன்றி தமிழனின் கலச்சாரத்தை கூறும் ஐம்பெருக்காப்பியம் மற்றும் தமிழ் சங்ககால நூல்களில் ஆன்மீகம் கலந்த கலச்சாத்தைக் கூறி இருப்பது இதற்க்கு மிகப்பெரியச் சான்றாகும்.

மேலும் இதனை தமிழன் இன்றும் கொண்டாடும் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் இதனைக் காணலாம். இன்று தமிழன் கொண்டாடும் பொது நிகழ்ச்சினாலும் சரி பண்டிக்கைகளாக இருந்தாலு சரி, அது சுப நிகழ்ச்சினாலும் சரி துக்க நிகழ்ச்சினாலும் சரி அது ஆன்மிகத்துடனே கலந்துருப்பதை நாம் காணலாம்

உழவனக்காகக் கொண்டாடுப்படும் தைப்பொங்கலானலும் சரி, உழைப்பாளிக்கு கொண்டாடுப்படும் ஆயுதப்பூஜையானாலும் சரி அது ஆன்மிகத்துடனே கலந்துருப்பதை நாம் காணலாம்

உலகமே இன்று தனது வருடபிறப்பை மதுவுடன் பப்புகளிலும் கடற்கரைகளிலும் கொண்டாடும் போது நாம் மட்டும் சித்தரை திருவிழா என கோயில்களில் கொண்டாவது. நமது ஆன்மிகம் நமது கலச்சாரத்துடனே கலந்திருப்பதுக்கான மற்றொருச் சாண்று.

மேலும் இந்மிகழ்ச்சி நமது முன்னோர்கள் நமக்குக் காட்டிய ஆன்மீகப் பாதை நமக்கு நற்குணம் மற்றும் நல்ல வாழ்க்கை நெறிமுறைகளை கற்றுத் தருகின்றது என்ற உண்மை உணர்த்துகிறது.

இத்தகைய சிறிப்புமிக்க நமது ஆன்மிகக் கலாச்சாரத்துக்கு மூடநம்பிக்கை என்னும் முடிப்போட்டு, நம்மை அடிமையாக்க அவர்களின் அடையாளத்தை நம்மிடம் மதம் என்ற பெயர்களில் புகுத்தி நம்மை அடிமையாக்கி நம்மை ஆளவும் தொடங்கிவிட்டனர் அந்நியர்கள்.

நமது கலச்சாத்தை மூடநம்பிக்கை என்று சொன்னவர்கள். உண்மையில் அவர்களின் மூடதனத்தை நம்மேல் புகுத்தி நம்மை முட்டாளாக்கிவிட்டனர். நாம் கடவுளுக்கு ஆகாரம் படைப்பதை மூடநம்பிக்கை என்று சொன்ன மதம் தான் இன்று சிடியைத் தொட்டதும் இறைவன் அருள் பெற்று பரவசம் அடையலாம் என கற்றுத்தருவது ஜீரணமாகாத வேடிக்கை.

நமது ஆன்மீகத்தைப் போன்றே நமது தமிழன் கண்ட கடவுளும் உலகின் வேறு எந்தச் சமயங்களிலும் இல்லாத தனித்தண்மை மற்றும் சிறப்பு வாயந்தவர்கள்.

தமிழன் கண்ட கடவுள் எந்த ஒரு வரையரைக்குள்ளும் அடங்காதவன். எரியும் நெருப்பின் ஓளிரும் திசைப்போன்று எக்கொள்கைக்காரர்களுக்கும் பொருந்தும் அதிசயங்களின் அரசன் அவன்.

ஒளியுமானவன் கடவுள்யென்பவர்களுக்கும் பொருந்துவான், அண்பே சிவம் என்பவர்களுக்கும் பொருந்துவான்.

ஜம்பூதங்களே கடவுள் என்பவர்களுக்கும் பொருந்துவான், ஆண்மாவே கடவுள் என்பவர்களுக்கும் பொருந்துவான்.

என்னுள் இருப்பவனே கடவுள் என்பவர்களுக்கும் பொருந்துவான் , நானே கடவுள் என்பவர்களுக்கும் பொருந்துவான் தமிழன் கண்ட கடவுள்.

தமிழன் கண்ட கடவுள் நம்மை அவன் சாயலிலே படைத்தக் காரணத்தினால் நம்மிடம் காணப்படும் குணங்களான இன்பம், துன்பம், கோபம், சாந்தம், பகை, பொறாமை, நன்மை, தீமை, காமம் போண்ற குணங்கள் அவனிடமும் உள்ளது. அவனிடம் இருந்தே நமக்கு கிடைக்கப்பெற்றது.

ஆகையால்தான் மற்ற மதங்களில் காணப்படுவதுபோல் கடவுள் வாழ்க்கை நெறிகளைப் போதிக்கும் போதகராக மட்டுமில்லாமல் நம் கடவுள் வாழ்ந்தேக் காட்டியுள்ளனர்

ஆம், நம் அண்றாட வாழ்வின் நெறிமுறைகளையும் அவற்றில் தோன்றும் பிரச்சனைகளும் அதற்கான தீரவுகளும் நமது தமிழன் கண்ட கடவுளின் கதைகளில் உள்ளது.

நம் தமிழன் கண்டு வழிப்பட்ட கடவுள் நமது கிராமங்களில் கருப்பன், முருகன், அய்யணார், வீரணார், சுடலைமாடன், பேச்சி, பத்திரகாளி பல பெயர்களில், பல அவதாரங்களில் அருளிக்கொண்டுருக்கின்றனர். அவர்களின் வரலாற்று கதைகள் அருமையானதாகவும், ஆச்சரியமானதாக மட்டுமின்றி நம்மை சிந்திகக வைக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் அவர்களுக்கென நடத்தப்படும் கொடை மற்றும் விழாக்கள் மிகவும் அற்புதமான நிகழ்ச்சி இருக்கின்றது

அத்தகைய சிறப்பான தமிழன் கண்ட கடவுளின் வரலாற்று கதைகளையும், அவர்களுக்கென நடத்தப்படும் விழாக்களின் சிறப்புகளைப் பற்றி பின்வருவற்றுள் காணப்போகிறோம்.

– க. சண்முகநாதன்

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker