Spotlightஇந்தியா

மொபைலில் ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள் ??.. அப்போ இத கொஞ்சம் படிங்க!

நாளுக்கு நாள் தொலைபேசியின் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் முக்கியத்துவம் இந்த டெக்னாலஜி உலகில் ஒரு முக்கிய அங்கமாக மாறிக் கொண்டு வருகிறது.

அதிலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்ற சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.

அதிலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உபயோகப்படுத்தி வரும் இந்த ஸ்மார்ட் போனில் ஆபாச படங்களை அதின் வழியாக பார்த்து வருகின்றனர்.

இந்த ஆபாச படங்கள் பார்க்கும் போன்களை எல்லாம் பேஸ்புக், கூகிள், ஆரக்கல் போன்ற நிறுவனங்கள் கண்காணிக்கின்றதாம்.

உதாரணமாக, பேஸ்புக் அக்கவுண்டினை மொபைலில் லாகின் செய்துவிட்டு நீங்கள் மற்ற வலைதளங்களில் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதை தான் அவர்கள் கண்காணிக்கிறார்கள்.

இதுகுறித்து அந்த நிறுவனங்களிடம் கேட்டபோது மார்க்கெட்டிங் செய்வதற்காக நாங்கள் இந்த தகவல்களை சேமிக்கவில்லை என்றும், பயனர்கள் பார்க்கும் தளங்கள் எங்கள் பக்கங்களில் பகிர்ந்துவிடாமல் இருப்பதற்காகவும், அது சம்மந்தமான விளம்பரங்களை தவிர்க்கவும் இந்த தகவல்களை சேமிப்பதாக கூறியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button