Spotlightசினிமா

திரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87”

 

பல கேங்க்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தாலும், ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் “தாதா 87”.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து பாடல்கள் வரை எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது இப்படம்.

கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

திரு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்கு மக்கள் அளித்த பேராதரவைப் பார்த்து “தாதா 87” படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளனர்.

திரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87” அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற விரைவில் வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button