Spotlightசினிமா

சென்னையில் “துணிவு” படப்பிடிப்பு; காலையிலேயே சாலையில் குவிந்த கூட்டம்!!

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் படம் தான் “துணிவு”.

படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று அதிகாலை சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. தளத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால், படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக இப்படத்தினை திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button