சினிமா

‘டிராஃபிக் ராமசாமி’ இசை வெளியீட்டு உரிமையை டிரெண்ட் மியூசிக் கைப்பற்றியது!

சமூக போராளியான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை மையமாக வைத்து அதே பேரில் எடுக்கப்படும் படம் தான் ‘டிராஃபிக் ராமசாமி’. இப்படத்தின் ஆடியோ உரிமையை டிரெண்ட் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் சமூகப் போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் உருவாகுவதால் இப்படத்தின் இசையை வெளியிடுவதை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கொளரவமாக கருதுவதாகவும், ’ஹரஹரமகா தேவ்கி’ இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்திருப்பதால் பாடல்கள் ட்ரெண்டிங்காக இருக்கும் என்று டிரெண்ட் மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ் , ஆர்.கே. சுரேஷ் , அம்பிகா , உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி , மோகன்ராம் என்று பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி கெளரவ வேடத்தில் வருகிறார். புதுமுக இயக்குனர் விக்கி இயக்குகிறார்.

படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பிரபலமான நடிகர் ஒருவர் தோன்றி நடிக்கவுள்ளார். அது யார்? என்பது சஸ்பென்ஸ்.

‘தர்மதுரை ‘, ’மீசைய முறுக்கு’ ’சோலோ ‘ படங்களுக்குப் பின் டிரெண்ட் மியூசிக் நிறுவனம் இப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button