Spotlightசினிமா

”நேசமணி இட்லி சாப்பிட்டார்..” நெட்டிசன்கள் பண்ற வேலைய பாருங்க!

மூக வலைதளத்தில் ட்விட்டர் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. இந்த ட்விட்டர் பக்கத்தில் அதிகமான வார்த்தைகளை செயல்படுத்தும் போது அது ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கும்.

நேற்று முதல் ‘Pray_For_Nesamani’ என்ற வார்த்தை ட்விட்டரில் ஆசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. யார் இந்த நேசமணி என்று பார்த்தால், விஜய், சூர்யா நடிப்பில் வெளிவந்த படமான ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் இடம் பெறும் காமெடியை நாம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நினைவுகள்.

அந்த படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் தான் இந்த நேசமணி. அதில் ஒரு காட்சியில் ரமேஷ் கண்ணா வேலை பார்க்கும் போது சுத்தியலை வடிவேலுவின் தலையில் போட்டு விட நேசமணியாகிய வடிவேலு மயங்கி விழுந்து விடுவார்.

இதனால் தான் உருவாகியுள்ளது இந்த ‘Pray_For_Nesamani’ என்ற டேக். நெட்டிசன்கள் இதற்காக பல விதமான மீம்சுகளை தயார் செய்து ஷேர் செய்து வருகின்றனர். இந்த மீம்சுகளை பார்த்தாலே சிரிப்புகளை எல்லையில்லாமல் வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button