
நடிகர் அஜித்குமார் தற்போது துணிவு படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தினைத் தொடர்ந்து தனது 62வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் அஜித்.
இப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது.
பொங்கல் முடிந்த சில தினங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனி ஒருவன் படத்தில் தனது வில்லத்தனத்தை வெறித்தனமாக காட்டியிருந்தார் அரவிந்த்சாமி. அஜித்தோடு இவர் இணைந்திருப்பதால் “ஏகே 62” படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Facebook Comments





