Uncategorized

வாத்தி – விமர்சனம் 3/5

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் வாத்தி. தெலுங்கு இயக்குனரான வெங்கி, இப்படத்தை இரண்டு மொழிகளில் இயக்கியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி ஒரே தேதியில் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பாடல்களும் படத்தின் டீசரும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதால் படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை வாத்தி நிவர்த்தி செய்தாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

கதைப்படி,

பள்ளி பயிலும் 3 மாணவர்களில் ஒரு மாணவரின் தாத்தா வைத்திருந்த வீடியோ கடை ஒன்றை சுத்தம் செய்யும் போது, அதில் இருக்கும் கேசட் ஒன்றை எடுக்கிறார்கள். அந்த கேசட்டில் இருக்கும் வீடியோவில் வாத்தியாரான தனுஷ் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். யார் இந்த வாத்தியார் என்று கண்டுபிடிக்க மூன்று மாணவர்களும் செல்கிறார்கள்.

அதன்பின் கலெக்டர் ஒருவர், தனுஷை பற்றி ப்ளாஷ் பேக் ஒன்றை அந்த மாணவர்களிடம் கூறுகிறார்.

கதை , 1995க்கும் மேல் பயணப்படுகிறது. தனியார் பள்ளிகளின் அசோசியேஷன் தலைவராக இருக்கிறார் சமுத்திரக்கனி. அரசு பள்ளிகளை படிப்படியாக ஒழித்து தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். தனியார் பள்ளிகளின் படிப்பு கட்டணத்தை அதிகமாக வசூலிக்கிறார் சமுத்திரக்கனி.

அரசு பள்ளிகளின் தரத்தை குறைக்க, தனியார் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு அனுப்புகிறார் சமுத்திரக்கனி. அவர்களால் பெரிதாக சாதிக்க முடியாது என்ற எண்ணத்தில் இந்த தந்திரத்தை செய்யும் சமுத்திரக்கனி, தனுஷை சோழவரம் என்ற ஆந்திர – தமிழக எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு அனுப்புகிறார்.

அங்கு பள்ளிக்கு எந்த மாணவரும் வராத சூழலில், மாணவர்களை எப்படி பள்ளிக்கு அழைத்து வந்தார்.? சமுத்திரக்கனியின் நரித்தந்திரத்தை தனுஷ் முறியடித்தாரா.? சமுத்திரக்கனியை தாண்டி பள்ளி மாணவர்களை தனுஷ் சாதிக்க வைத்தாரா.? என்பதே படத்தின் மீதிக் கதை..

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி கதைக்கு ஏற்ற ஹீரோவாக ஜொலிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர் நடிகர் தனுஷ். இந்த படத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் தெளிவாக நடித்து வாத்தியார் கேரக்டரை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் தனுஷ். வசன உச்சரிப்பில் தொடங்கி ஆக்‌ஷன் வரை அதிரடி காட்டியிருக்கிறார் தனுஷ்.

நாயகி சம்யுக்தா அழகு தேவதையாக காட்சியளித்தாலும் நடிப்பின் திறமையை காண்பிக்கும்படியாக எந்த இடத்திலும் காட்சி இல்லாதது ஏமாற்றமே. அதுமட்டுமல்லாமல், வசன உச்சரிப்பு முழுவதுமாக சரியில்லாமல் போனது மிகப்பெரும் ஏமாற்றமே. ”வா வாத்தி” பாடலைத் தவிர ஒளிப்பதிவில் பெரிதாக ஜொலிக்கவில்லை.

ஆந்திரா – தமிழ்நாடு பார்டரில் கிராமம் இருப்பதாக கூறி முழுக்க முழுக்க ஆந்திர நடிகர்களை மட்டுமே வைத்து படத்தை முடித்திருக்கிறார்கள். 5 தமிழ் நடிகர்களை தவிர வேறு யாரும் தமிழ் நடிகர்களாக முகங்கள் இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு சில நேரங்களில் டப்பிங்க் படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

ஸ்டண்ட் அடிப்பது போன்று திரைக்கதை நம்மை கதைக்குள் இழுத்துச் செல்லாமல் போனது படத்திற்கான பெரும் சரிவு.

வலுவான கதையை கையில் எடுத்த இயக்குனர் வெங்கி அட்லூரி, அதை கொடுக்கும் விதத்தில் பெரிதாக கோட்டை விட்டிருக்கிறார். ஒரு சிலர் ஓவர் ஆக்டிங்கை கொடுத்து அந்த காட்சியை நசுக்கி எடுத்திருக்கிறார்கள்.

தனுஷ் – சம்யுக்தாவின் காதல் காட்சிகளில் பெரிதான ஈர்ப்பு ஏற்படவில்லை.

ஒளிப்பதிவும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாகவும் இல்லை.. இசையில் பாடல்கள் அதிரடியாக கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ். பின்னணி இசையும் மிரட்டல் தான்.

கதை ஓகே திரைக்கதை சுமார் என்று சொல்லிக் கொண்டு … ஒரு முறை “வாத்தி”யை பார்த்து ரசிச்சிட்டு வரலாம்னு சொல்லி விமர்சனத்தை முடிச்சிக்கலாம்.

வாத்தி – ஓகேகேகே……….

Facebook Comments

Related Articles

Back to top button