Spotlightவிமர்சனங்கள்

வலிமை – விமர்சனம் 3/5

ஜித்குமார் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படம் வெளியாகி சுமார் 900 நாட்களுக்கும் அதிகமாகிவிட்ட பிறகு, இதே கூட்டணி மீண்டும் இணைந்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “வலிமை”. இவ்வளவு நாட்கள் அஜித்குமாரின் படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை படத்தின் விமர்சனம் மூலம் காணலாம்.

கதைப்படி,

மதுரையில் அசிஸ்டென்ட் கமிஷ்னர் போலீசாக வருகிறார் அஜித்குமார். அங்கு நடக்கும் தொடர் கொலைக்கு தனது திறமையால் முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார். அதேசமயத்தில் சென்னையில் கொலைகளும், நகை பறிப்புகளும், கஞ்சா கடத்தலும் என மிகவும் மோசமான ஒரு சூழ்நிலை இருந்து வருகிறது.

குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னைக்கு பணிமாறுதல் ஆகிறார் அஜித். வந்த சிறிது நாட்களிலே, அதுவரை கண்டுபிடிக்க முடியாத கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான வில்லன் கார்த்திகேயனை அடையாளம் காண்கிறார் அஜித். கார்த்திகேயனையும் கைதுm செய்து விடுகிறார்.

தனக்கு மேலே ஒருவர் இருப்பதாக கூறி, அஜித்தின் உடன் பிறந்த தம்பியான குட்டியை இதில் இழுத்துவிடுகிறார் கார்த்திகேயன். இந்த கூட்டத்திற்குள் குட்டி எப்படி வந்தார்.? வில்லனை அஜித் எப்படி பழி வாங்கினார்.? வில்லன் கட்டுப்பாட்டில் இருந்த பல நூறு இளைஞர்களை அஜித் காப்பாற்றினாரா, இல்லையா.? என்பதற்கு இரண்டாம் பாதியில் பதில் இருக்கிறது.

கதையை சுருக்கமாக சொல்லனும்னா பைக் ரேஸ் மூலம் நல்ல போலீஸ் ஆபிசராக இருக்கும் நல்லவர்க்கும் அதே பைக் ரேஸை தவறான செயலுக்கு பயன்படுத்தும் கெட்டவருக்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான கேம் தான் இந்த வலிமை. இதில் வென்றது மற்றவர்களை அழிக்க துடிக்கும் வலிமையா இல்லை மற்றவர்களை காக்க துடிக்கும் வலிமையா என்பதே இந்த வலிமை..

ட்ரெய்லரை பார்த்து படத்திற்கு வந்த எதிர்ப்பார்ப்பு எல்லாம் முதல் பாதியிலே முழுமையாக திருப்த்தியடைய வைத்துவிட்டு இரண்டாம் பாதி 90’களின் காலகட்ட படங்களை போலவே அமைந்தது பெரும் ஏமாற்றம். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சிகள் சுத்தமாக பழைய ரஜினி, விஜயகாந்த் படங்களின் அப்பட்டமான காட்சியாக பிரதிபலித்தது ஏமாற்றமே.

கொரனா காலகட்டத்தில் படப்பிடிப்பு பாதிப்பு ஏற்பட்டது  இரண்டாம் பாதியில் நன்றாகவே தெரிகிறது. இரண்டாம் பாதியின் அநேக காட்சிகள் உள் அரங்குகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது…

படத்தின் நீளம், குடும்ப செண்டிமென்ட் படத்தின் மிகப்பெரும் பலவீனமாக இருக்கிறது.. மிகப்பெரும் பலம் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் தான்… பைக் ஸ்டண்ட் காட்சிகளை தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்திலும் காணவில்லை.. அதிர வைத்திருக்கிறார்கள்.

இரண்டரை வருடங்களுக்குப் பிறகு அஜித் குமாரை திரையில் கண்ட ரசிகர்களுக்கு இப்படம் ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும்.. ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து சென்றிருக்கிறார் அஜித். ஸ்டண்ட் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார். இந்த மாதிரியான ஸ்டண்ட் காட்சிகளை இந்திய சினிமாவிலேயே அஜித்தைத் தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது என்று தான் கூற வேண்டும். அப்படியொரு மிரட்டல்..

வில்லனாக கார்த்திகேயன் அசரடித்திருக்கிறார். அஜித்திற்கு இணையான காட்சிகளை பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறது கார்த்திகேயனுக்கு..

அஜித்திற்கு தம்பி கேரக்டரில் நடித்தவரின் நடிப்பையும் பாராட்டலாம்… நாயகி ஹியூமா குரேஷி காட்சிகளில் மிளிர்கிறார்.

வலிமைக்கு மிகப்பெரும் வலிமை ஒளிப்பதிவு தான். நிரவ் ஷா’வின் ஒளிப்பதிவு மேஜிக் காட்டியுள்ளது..

அப்பறம், ஜீப்ரான் பின்னனி இசை ஒரு சில இடங்களில் நல்லா இருந்தாலும் அஜித் படத்திற்கான கமர்ஷியல் பின்னனி இதில் மிஸ்ஸிங்க்… யுவனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்துள்ளன.. திலீப் சுப்புராயனின் சண்டைக் காட்சிகள் பிரம்மிக்க வைத்துள்ளன.

இயக்குனர் கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் வலிமை இன்னமும் வலுப்பெற்றிருக்கும்…

இருந்தாலும் வலிமை – மிரட்டல் தான்

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close