
அஜித் நடிக்க வினோத் இயக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “வலிமை”.
இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தல ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்நிலையில், இப்படம் வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஏற்கனவே, பொங்கல் ரேசில் விஜய் நடிக்க நெல்சன் இயக்கும் பீஸ்ட் இடம் பெற்றிருந்தது.
வலிமை படம் ரிலீஸ் அறிவிப்பை தொடர்ந்து, பீஸ்ட் அடுத்த வருடம் ஏப்ரலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய் – அஜித் ரசிகர்களின் மோதல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வரும் நிலையில் இருவரின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது நல்லதல்ல என பீஸ்ட் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் முடிவெடுத்துள்ளதாம்.
வலிமையோடு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பொங்கல் அன்று மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.