
இயக்குனர் ராஜா பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வலு.
கதைப்படி,
அடர்ந்த காட்டிற்குள் மூலிகை ஆராய்ச்சி செய்வதற்காக ஆர்த்தி மற்றும் அழகு ப்ரியா இரு இளம் பெண்கள் செல்கின்றனர்.
இவர்களுடன் குழந்தைத் தனமாக இருக்கும் கொலம்பஸ் என்பவரும் உடன் செல்கிறார்.
இந்த சூழலில், காட்டிற்குள் வேட்டையாட வரும் நால்வர் இந்த இரு பெண்களையும் தூக்க முற்படுகிறார்கள். அதே சமயம், அலெக்ஸ் என்ற வனத்துறை அதிகாரி, இசையமைப்பாளர் ஒருவர் மற்றும் உள்ளூர் கிராமத்தார் ஒருவர் என பலரும் அந்த மூலிகை காட்டிற்குள் இருக்கின்றனர்.
இவர்கள் இந்த காட்டை வட்டம் போட என்ன காரணம்.? இவர்களுக்கு அப்படி என்ன தேவை இருக்கிறது.?என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நோக்கம் வலுவாக இருந்தாலும், கதை செல்லும் விதத்தில் சரியான வலு இல்லாததால் ஆங்காங்கே சிறு சறுக்கல்கள் போல கதையும் தொங்கிக் கொண்டே செல்கிறது.
அனைவரும் தலையில் வைத்திருப்பது “விக்” என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், நடிப்பிற்காக கொஞ்சம் அல்ல நிறையவே மெனக்கெடல் செய்திருக்கலாம். அல்லது நன்றாக ட்ரெய்னிங் எடுத்துக் கொண்டு ஷுட்டிங்க் சென்றிருக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணமுடைய மூலிகைகள் நம் நாட்டில் இருக்கும் காடுகளில் கிடைக்கிறது. அதை, பிசினஸாக பார்க்காமல் மக்களின் உயிருக்காக அதை பயன்படுத்த வேண்டும் என்ற நல்லதொரு மூலக்கதையை கையில் எடுத்த இயக்குனருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
சொல்லிய விதத்தில் இன்னும் அதிகமாகவே மெனக்கெடல் செய்து படத்திற்கு இன்னும் வலு ஏற்றியிருந்தால்.. வலு வலுவாகவே இருந்திருக்ககூடும்…