விமர்சனங்கள்

வங்காள விரிகுடா – குறுநில மன்னன் – விமர்சனம்

Story, Screenplay, Lyrics, Songs, Music, Cinematography, Art Direction, Dance, Fight Training (Individual), Costumes, Stills, Makeup, Playback Singing, Background Music, Production Design, Titling, Hairstyling, Outdoor Set Management, Production, and Direction – குகன் சக்ரவர்த்தி

தூத்துக்குடி பகுதியில் அனைத்து மக்களுக்கும் உதவிகளை செய்து, அவர்களின் மனதில் பெரிதான ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் அண்ணாச்சி (குகன் சக்ரவர்த்தி). மக்கள் அனைவருக்கும் நல்லவற்றை பல செய்து வந்து கொண்டிருக்கிறார்.

தனது காதலி, இன்னொருவருக்கு மனைவியானதை நினைத்து அவ்வப்போது வருந்துகிறார். இருந்தாலும், தனது நண்பனின் மகள், தன்னை கட்டிக் கொள்ளாவிட்டால் உயிரை விட்டுவிடுவேன் என்று கூறி, அவரை திருமணமுன் செய்துகொள்கிறார்.

திருமணம் செய்து கொண்டாலும், இருவரும் கணவன் – மனைவியாக இல்லற வாழ்க்கை வாழாமல் தான் இருக்கின்றனர்.

இந்த சூழலில், தனது முன்னாள் காதலி கணவனின் கொடூரத்திற்கு ஆளாக்கப்படுகிறார் என்றறிந்து அவரைக் கொன்று, காதலியுடனும் தனது அன்பை அவ்வப்போது வெளிக்காட்டி வருகிறார்.

இந்த இரு வீட்டால் அவர் பட்ட இன்னல்கள் என்ன.? துரோகம் என்ன.?? மக்கள் மீது அண்ணாச்சி வைத்திருக்கும் பாசம் என்ன என்பதை வெளிப்படுத்தும் ஒரு காவிய படைப்பு தான் இந்த வங்காள விரிகுடா.

கதை, திரைக்கதை, வசனம் என தொடங்கி சுமார் 21 கிராஃப்ட் பணிகளையும் தனி ஒரு ஆளாக இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார் குகன் சக்ரவர்த்தி.

பாடல்கள் தொடங்கி ஆக்‌ஷன், வசனம், நடிப்பு என அனைத்திலும் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கின்ற பல தலைவர்களையும் இப்படத்திற்குள் கொண்டுவந்து அவர்களுக்கு மரியாதையும் செய்திருக்கிறார் குகன் சக்ரவர்த்தி. சட்டென பார்ப்பதற்கு கரண் போன்ற உருவம் கொண்டிருப்பதால், மனதிற்கு எளிதாக ஒட்டிக் கொண்டுவிட்டார் குகன் சக்ரவர்த்தி.

ஐயா அப்துல்கலாம் அவர்கள் மீது குகன் சக்ரவர்த்தி வைத்திருக்கும் அன்பையும் இப்படத்தில் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். அதுமட்டுமல்லாமல், காட்சிகள் அனைத்தும் ஜம்ப் ஆகிக் கொண்டே சென்று கொண்டிருந்தது சற்று சலிப்பை ஏற்படுத்திவிட்டது.

படத்தின் ஆரம்பத்தில் அண்ணாச்சி மீது பாசத்தை வெளிப்படுத்தும் பொன்னம்பலம், அதன்பிறகு எப்போது அவர் வில்லனாக ஆனார் என்பதை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம். கதாபாத்திரங்களை இன்னும் சற்று நன்றாகவே பயன்படுத்தியிருந்திருக்கலாம்.

இசை மற்றும் ஒளிப்பதிவு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

வங்காள விரிகுடா – குகன் சக்ரவர்த்தியின் பெருமை பாய்ச்சல்…

Facebook Comments

Related Articles

Back to top button