Spotlightவிமர்சனங்கள்

ஸ்கை ஸ்கிராப்பர் – விமர்சனம் 3/5

டிவைன் ஜாண்சன் படம் என்றாலே அனைவருக்குமே ஒரு திருவிழா போன்று தான். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் என்று ஒன்று இருக்காது.

அவர் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் படம் தான் ஸ்கை ஸ்கிராப்பர்.

ராணுவ அதிகாரியான டிவைன் ஜான்சன் ஒரு குண்டு வெடிப்பில் தன்னுடைய ஒரு காலை இழக்கிறார். இதனால் அவர் செக்யூரிட்டி அதிகாரியாக வேலை பார்க்க நேரிடுகிறது.

உலகத்திலேயே 250 மாடிக்கும் மிக அதிகமான உயரம் கொண்ட ஒரு கட்டிடத்தில் செக்யூரிட்டி அதிகாரியாக பணியாற்றுகிறார். அதே கட்டிடத்தில் குடும்பங்கள் தங்க ஏதுவாக அந்த கட்டிடம் இருக்கிறதா என்பதற்காக அக்கட்டிடத்தில் சோதனைக்காக ஒரு அப்பார்ட்மெண்டில் அவர் குடும்பத்துடன் குடியேறுகிறார்.

செக்யூரிட்டி அதிகாரி என்பதால் எல்லா மாடிகளுக்கும் செல்லக் கூடிய ஆக்சஸ் கார்டு அவருக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வில்லன் கோரெஸ் போத்தா அந்த கட்டிடத்தில் புகுந்து, 96வது தளத்தில் தீ வைக்கிறான். மேலும் அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் நிறுத்திவிடுகிறான்.

அந்த கட்டிடத்தின் தீயை நம்ம ஹீரோ டிவைன் ஜான்சன் எப்படி அணைத்தார்?. தன்னுடைய மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் மிக மிக ரசிக்கக் கூடியவர் டிவைன் ஜான்சன். மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆக்‌ஷன் காட்சிகளும், பிரம்மாண்ட கட்டிடத்தின் அமைப்புகளும் நம்மை வியப்பின் உச்சத்திற்கே சென்று விடுகிறது. ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு அவர் தாவி செல்லும் போது நம் அனைவரையும் ஒரு நிமிடம் திகைக்க வைத்து விடுகிறார் நாயகன்.

காட்சியமைப்புகளிலும் எந்த ஒரு குறைபாடுகளும் இல்லாமல் மிகக் கச்சிதமாக செய்திருக்கின்றனர்.

ஸ்கை ஸ்கிராப்பர் – ஆக்‌ஷனுக்கு குறைவில்லை.. ரசித்து வியக்கலாம்..

Facebook Comments

Related Articles

Back to top button