Spotlightவிமர்சனங்கள்

வரிசி – விமர்சனம் 2.75/5

கார்த்திக் தாஸ், சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா, மனோஜ், ஜெயஸ்ரீ, கணேஷ், பாலாஜி ராஜசேகர், மதுமிதா, அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்து, ஹீரோ கார்த்திக் தாஸே இயக்கியிருக்கும் படம் தான் “வரிசி”.

சமூகத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக மாறியுள்ள பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிய மூலக்கதையை இப்படக்குழு எடுத்துள்ளது. அதை மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதா இல்லையா என்பதை பார்த்துவிடலாம்.

கதைப்படி,

சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவரை கடத்தி பாலியலுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்துவிடுகிறான் வில்லன். இந்த வழக்கை விசாரித்து வருகிறார் சிபிஐ அதிகாரி கிருஷ்ணா.

வழக்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இது ஒருபுறம் நகர்ந்து செல்ல,

நாயகன் கார்த்திக் தாஸ், சப்னா, மனோஜ், மற்றும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் வரும் நபர் என நால்வரும் நண்பர்கள். இவர்கள் அனுபமா குமாரின் அரவணைப்பில் வளர்கின்றனர். இதில் மனோஜ் என்பவர் அனுபமாவின் மகன். அனுபமா தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

கார்த்திக் தாஸும் சப்னாவும் காதலர்கள். விரைவில் திருமணம் செய்ய திட்டம் தீட்டும் வேளையில், சப்னா கடத்தப்படுகிறார்.

சப்னா மீட்கப்பட்டாரா.? கடத்திய அந்த நபர் யார்.? சிபிஐ அதிகாரி கிருஷ்ணா இந்த வழக்கை முடித்தாரா .? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் கார்த்திக் தாஸ், இயக்குனராகவும் இருந்ததால் தனக்கான காட்சியையும் கட்சிதமாக கையாண்டிருக்கிறார். புதுமுக நடிகர் என்ற பார்வை போல் அல்லாமல், அனுபவ நடிகர் போன்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் தாஸ்.

நாயகி சப்னா தாஸ், பார்ப்பதற்கு அழகாக வந்து செல்கிறார். நடிப்பிலும் பெரிதாக குறை சொல்லும்படியாக இல்லாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிபிஐ அதிகாரியாக வரும் கிருஷ்ணா, கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருந்தார். அளவெடுத்து செய்தது போன்ற கனக்கச்சிதமான நடிப்பை கொடுத்திருந்தார்.

நண்பனாக வந்த மனோஜ் மற்றும் மனோஜின் காதலியாக வந்த ஜெயஸ்ரீ உள்ளிட்டோரின் நடிப்பையும் நாம் பாராட்டலாம்.

மதுமிதாவின் கேரக்டர் படத்தோடு ஒட்டாமல், தனியாகவே நின்றுவிட்டது. அனுபமாவின் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு வசனங்களையும் இவ்வளவு மெதுவாக கூறிக் கொண்டிருந்தால் ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட மாட்டார்களா.?

முதல் பாதியில் காதல் காட்சியை சற்று குறைத்து, மையக்கதையை சற்று முன்னரே தொட்டிருக்கலாம். இரண்டாம் பாதியில் படத்தின் கதை மொத்தத்தையும் வைத்து சற்று கலைப்படைய வைத்துவிட்டார் இயக்குனர்.

அருமையான, சமூகத்திற்கு பாடம் உணர்த்தும்படியான ஒரு மையக்கருவை கையில் எடுத்த இயக்குனர் கார்த்திக் அதை கொண்டு செல்லும் விதத்தில் சற்று சரிவை கண்டிருக்கிறார்.

முதல் படத்தின் அனுபவம், அடுத்தடுத்த படங்களில் தனது சரிவை ஏணியாக மாற்றுவார் என்பதை உறுதியாக நம்பலாம். ஏனென்றால், கதாபாத்திரத்தின் தேர்வு, அவர்களின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவந்த விதம் என இவற்றில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார்.

மிதுன் மோகனின் ஒளிப்பதிவு, படத்தின் ஆரம்பக்காட்சியிலே நம் கண்களை படத்திற்குள் கொண்டு சென்ற கண் வித்தைக்காரர்.

நந்தாவின் இசையில், பாடல்கள் கேட்கும் ரகம். பின்னனி இசையும் நம்மோடு வரும் நிழல் போல், கதையோடு பயணித்தது.

எடிட்டர் இரண்டாம் பாதியில், காட்சிகளை சிலவற்றை தூக்கியெறிந்து இன்னும் ஷார்ப்பாக கொடுத்திருந்திருக்கலாம்.

இணையத்தில் பெண் போல் பேசி ஏமாற்றும் சில கொடூரர்களின் முகத்திரையையும் இயக்குனர் இப்படத்தில் கூறியிருப்பது பாராட்டுதலுக்குறியது.

வரிசி – வரிசை கட்டி நடித்திருந்தாலும், வலு இல்லாதது சற்று குறையே…

Facebook Comments

Related Articles

Back to top button