Spotlightசினிமா

எஸ் கவிதா தயாரிப்பில் ஜனகராஜ் நடிக்கும் “தாத்தா”.. வாழ்த்து கூறிய விஜய் சேதுபதி!

யக்குனர்கள் பாலாஜி தரணிதரன் மற்றும் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த நரேஷ் என்பவர் தாத்தா என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.

பிரபல பத்திரிகையாளர் எஸ் கவிதா தனது இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் (impress film’s) சார்பில் இக்குறும்படத்தை தயாரித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக திகழ்ந்த ஜனகராஜ் இக்குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நூடுல்ஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் வினோத் இந்த குறும்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இசைப்யல் ஏ ஆர் ரகுமான் அவர்களின் சகோதரி மகள் , ஆமினா ரஃபிக் இக்குறும்படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்.

கலை இயக்குனர் சமர், ஆடை வடிவமைப்பு வாசுகி பாஸ்கர் செய்துள்ளனர்.

தாத்தா – பேரன் உறவுகளுக்கிடையேயான பாசத்தை மையமாக வைத்து இக்குறும்படத்தை இயக்கியிருக்கிறாராம் இயக்குனர் நரேஷ்.

இக்குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேற்றைய தினம் தனது எக்ஸ்(X) தளத்தில் வெளியீட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

விரைவில் இக்குறும்படம் வெளிவரும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button