Uncategorized

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா!!

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 2018 ஆண்டு நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தடகளப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசுடன் கூடிய பாராட்டுவிழா இன்று (08.09.2018) நடைபெற்றது.

சமீபத்தில் ஜகார்த்தாவில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் 4×400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ஆரோக்கிய ராஜீவ், ஆடவருக்கான 400 மீட்டர் தடையோட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்ற திரு. தருண் ஐயாசாமி, நெடுந்தொலைவு ஓட்டப்பந்தய வீரரும் விருதுக்குரிய தகுதியைப் பெற்றருந்தவருமான திரு. கோவிந்தன் லக்ஷ்மணன் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் விதமாக முகப்பேர் வேலம்மாள் பள்ளி நிர்வாகம் தலா இரண்டு லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கி பாராட்டியது.

பாராட்டு விழாவில் வீரர்கள் திரு. ஆரோக்கிய ராஜீவ் மற்றும் திரு. தருண் ஐயாசாமி, மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் உரையாற்றினர். பின்னர் மாணவர்கள் கேட்ட வினாக்களுக்கு சிறப்பான முறையில் பதிலளித்தனர்.

முகப்பேர் வேலம்மாள் பள்ளி நிர்வாகம் மேற்கண்ட இந்த முயற்சி மாணவர்களிடையே விளையாட்டின் மீதான விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் தூண்டுவதாக அமைந்திருந்தது.

 

Facebook Comments

Related Articles

Back to top button