தமிழ்நாடு

அல்சஃபி ஆம்பூர் பிரியாணி சென்னையில் திறப்பு

சென்னையில் பல்வேறு வகையான புது புது உணவகங்கள் திறக்கப்பட்டாலும், மக்களின் நாவுக்கு ஏற்ற சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்கும் ஒரு சில உணவகங்கள் மட்டுமே அவர்களது மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. அந்த வரிசையில் மக்களின் மனதுக்கு நெருக்கமான, கடந்த 1993 ஆம் ஆண்டு ஆம்பூரில் தொடங்கப்பட்ட அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம் தற்போது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையில் உள்ள நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் பக்கத்தில் திறக்கப்பட்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம், கடந்த 25 வருடங்களாக ஆம்பூரின் நம்பர் ஒன் பிரியாணி உணவகமாக திகழ்ந்து வருகிறது. தற்போது சென்னையில் திறக்கப்பட்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம் சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதிலும் திறக்கப்பட உள்ளது.

மலிவான விலையில், சுவையான தரமான பிரியாணி மற்றும் பிற அசைவ உணவு வகைகளை வழங்குவதையே தங்கள் நோக்கமாக கொண்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவக நிர்வாகம், இதனை தொழிலாக மட்டும் இன்றி ஒரு சேவையாகவும் செய்து வருகிறது.

தற்போது சென்னையின் முதல் கிளையை வளசரவாக்கம், ஸ்ரீ தேவி குப்பம் சாலையில் திறந்துள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம், சென்னை முழுவதும் 20 கிளைகளை திறக்கப்பட இருப்பதோடு, தமிழகம் முழுவதும் 2020 ஆம் ஆண்டுக்குள் 50 கிளைகள் திறக்கப்பட உள்ளது.

இன்று முதல் வளசரவாக்க கிளையில் விற்பனையை தொடங்கியுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தில் ஆன்லைன் ஆப்-களுக்கான ஸ்விக்கி (Swiggy) சொமட்டோ (Zomato) உபேர் (Uber) மூலமாகவும் ஆர்டர் செய்யலாம்.

பிரியாணி மட்டும் இன்றி, கிரில் சிக்கன், சவர்மா, தந்தூரி வகைகள், சைனீஸ் வகைகள் என பல வகையான அசைவ உணவுகள் இங்கு கிடைக்கும்.

அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் கமல் பேசும் போது, “சுவையான மற்றும் மலிவான விலையில் பிரியாணி மற்றும் பிற அசைவ உணவு வகைகளை வழங்குவது தான் அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் நோக்கம். சென்னையில் பல கிளைகளை திறக்க உள்ளோம். தமிழகத்தில் சுமார் 50 கிளைகள் திறக்க உள்ளோம். பிராஞ்சீஸ் முறையில் இந்த கிளைகள் திறக்கப்பட உள்ளது.

இதற்காக டெப்பாசிட் ஏதும் நாங்கள் வசூலிக்கவில்லை. 300 சதுர அடி இடம் இருந்தால் போதும், யாருக்கு வேண்டுமானாலும் பிராஞ்சீஸ் கொடுப்போம். இன்று வளசரவாக்க கிளையை திறந்தவுடனேயே விற்பனை அமோகமாக இருப்பதோடு, பிராஞ்சீஸுக்காக 10 புக்கிங் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தை சேர்ந்த அஜய் பாண்டியன் பேசும் போது, “நாங்கள் சமைக்கும் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசி, மசாலா உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களும் தரமானதாக இருக்கும், அதனால் தான் எங்களது பிரியாணி 25 ஆண்டுகளாக மக்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளது.

தரமான உணவை மலிவான விலையில் கொடுப்பது தான் எங்கள் நோக்கம்.” என்றார்.

இன்று திறக்கப்பட்ட வளசரவாக்கம் அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட சில வாடிக்கையாளர்கள், பிரியாணி தரம் குறித்தும், சுவை குறித்தும் வெகுவாக பாராட்டியதோடு, விலையும் நியாயமானதாக இருப்பதாக கூறினார்கள்.

பிரியாணி பிரியர்களே, இப்போதே உங்க போனை எடுங்க, புட் ஆப்பில் அல்சஃபி ஆம்பூர் பிரியாணியை ஆடர் செய்து சுவைத்து பாருங்க.

Facebook Comments

Related Articles

Back to top button