
தமிழ் திரையுலகில் நடிப்புத்திறமை மட்டுமல்லாது பல துறைகளிலும் பல சாதனைகளை புரிந்து வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன்.
நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள். அத்துடன் அவர் திரைத்துறைக்கு வந்து 60 வருடங்கள் நிறைவாகிறது. கமல்ஹாசன் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக 1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் நடித்தார்.
அவரது பிறந்தநாள் மற்றும் 60 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக வரும் 17ஆம் தேதி சென்னையில் மிகப்பெரும் விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இளையராஜாவின் இசைக் கச்சேரியும் நடைபெறவுள்ளது.
இதன், அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில்,ரஜினி, விஜய், அஜித் புகைப்படங்கள் அடங்கிய அழைப்பிதழ்கள் அடங்கும்.
ரஜினி இந்நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்து கொள்வார் என்பது முன்பே அறிந்த ஒன்று தான். அதே வேளையில், விஜய் மற்றும் அஜித் இருவரும் கமல்ஹாசன் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள காரணத்தால் இருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.