
உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று தென்னிந்திய திரையுலகத்தையும் பெரிதாக பாதித்திருக்கிறது.
இந்த நேரத்தில், தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒத்துக் கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு கோடி ரூபாய் அளவில்). இதன் மூலம், தான் தற்போது நடித்துவரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடைவார்கள் என்கிறார்.
மேலும் இத்தகைய நடவடிக்கைகளே திரைத்துறை விரைவாக உயிரத்தெழ உதவும் என திடமாக நம்புகிறார்.
விஜய் ஆண்டனியின் இந்த அதிரடியான செயலுக்கு தயாரிப்பாளர்கள் பலரும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
Facebook Comments





