குக்கூ, ஜோக்கர் என்ற தரமான படத்தை எடுத்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இயக்குனர் ராஜுமுருகன். இவர் அடுத்ததாக ஜீவாவை வைத்து ஜிப்ஸீ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தின் நாயகியாக மாடல் அழகியான நடாஷா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த மாடல் அழகியான இவர் மிஸ் இமாச்சல பிரதேஷ் என்ற பட்டத்தை வென்றவர். இவர் பாலிவுட் துறைக்கு கடந்த 2010இல் மிஷன் 11 ஜூலை படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு தமிழுக்கு ஜிப்ஸி படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.
இது குறித்து நடாஷா கூறுகையில் “இந்த படத்தில் சாமானிய குடும்பத்தில் வாழ்ந்து வரும் ஏழ்மையான கூச்ச சுபாவமுடைய பெண் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளேன். இந்த படத்தின் ஹீரோவான ஜீவாவிடம் காதல் கொண்ட பிறகு எனது வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதை மிகவும் அழகாக இயக்குனர் ராஜூமுருகன் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமை தான்” என்று அவர் கூறியுள்ளார்.
குக்கூ படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க உள்ளது.