
நடிகர் விஜய் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2027 ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டமாக மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், பரதன் இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம், 2017 ஜனவரி 12-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்தது.
இந்நிலையில், படம் வெளியாகி 10-வது ஆண்டை முன்னிட்டு, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘பைரவா’ திரைப்படத்தை மீண்டும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இந்த படம் வெளியான போது, விஜய்யின் கேரியரில் மிகப்பெரும் தோல்வி படமாக இந்த படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், படத்தில் அவரது தலைமுடி விக் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படியான ஒரு படத்தை எதற்காக ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் SIM Cine International நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.





