
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி திரைக்கு வந்த திரைப்படம் தான் ‘லெவன்’.
இப்படம் ஒரு புலனாய்வு த்ரில்லர் திரைப்படமாகும். இப்படமானது பத்திரிகையாளர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து திரையரங்கிற்குச் சென்று படத்தினைப் பார்த்த மக்கள், தங்களது சமூக வலைதளங்களில் இப்படத்தினை பாராட்டி படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தமிழ் சினிமாவில் புலனாய்வு த்ரில்லர் படங்களின் வரிசையில் டாப் 1 இடத்தில் இருக்கும் ராட்சசன் படம் போன்று இப்படம் இருப்பதாகவும் தங்களது விமர்சனங்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டும்படியாக இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைத்திருக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனித்திருந்தார்.




