நடிகர் விஜய்யின் மெர்சல் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. பெரிய அளவில் சாதனை படைத்தது.
சமீபத்தில் இந்த படத்திற்கு இங்கிலாந்தில் தேசிய விருது கிடைத்தது. அதை விஜய் ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடினர். இந்நிலையில் தற்போது மெர்சல் படம் கொரியாவில் நடக்கவுள்ள ‘பூச்சியோன் சர்வதேச திரைப்பட விழாவில்’ திரையிட அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது விஜய் படத்திற்கு கிடைத்த அடுத்த சர்வதேச கெளரவம் என்பதால் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
Facebook Comments