Spotlightசினிமா

நான் இங்க சண்டை போட வரல… சொல்ல வந்திருக்கேன் – சிறை படத்தினை குறித்து பேசிய விக்ரம் பிரபு!!

சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில் தமிழ் அவர்களின் எழுத்தில் உருவாகியிருக்கும் படம் தான் சிறை. வரும் 25ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு.. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய விக்ரம் பிரபு, “ வேலூர் சிவகங்கை மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சிறை படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம்.

நிறைய நைட் ஷூட் நடத்தினோம். தயாரிப்பாளர் மகன் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் நன்றாகவே நடித்திருந்தார். முதல் மூன்று நாட்களில் அவர் நடிப்பை பார்த்ததும் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக தான் இருக்கிறார் என்று தோன்றிவிட்டது.

முதல் படம் தானே கஷ்டப்படு என்று அவரிடம் சொன்னேன். சின்ன பையன், நல்லா ஹார்ட் வொர்க் பண்ணிருக்கார்.

டாணாக்காரன் மற்றும் சிறை இரண்டு படத்திற்கும் உடல் ரீதியாகவே நிறைய மாற்றங்களை செய்துள்ளேன். அது நிச்சயம் ரசிகர்களை சென்றடையும் என்று நம்புகிறேன்.

அன்னை இல்லத்தை பற்றி சில விஷயங்கள் வெளியே வந்தது. அனைத்தும் பிரச்சனைகளும் தீர்த்து முடித்துவைக்கப்பட்டது. இப்போது எந்த விதமான பிரச்சனைகளும் வீட்டில் இல்லை.

ஒரு கதைக்குள் ஹீரோவாக நாம் இறங்கும் போது நமக்குள்ளேயும் பெரிய பொறுப்பு ஒன்று ஏறிக் கொள்கிறது. நிறைய விஷயங்களை இந்த கதை பேசுகிறது. சண்டை போட வர்றோமா அல்லது சொல்ல வர்றோமோ என்பது ஒன்று இருக்கிறது.. நான் இங்க சொல்ல வந்திருக்கேன். அதை தான் இந்த கதை சொல்கிறது. எல்லாருக்குமே ஒரு பொறுப்பு இருக்கிறது. படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது.

இந்த படம் வெளியான பிறகு படம் பற்றி நிறைய விஷயங்கள் அனைவருமே பேசுவார்கள். இந்த படத்திற்குள் நான் வருவதற்கு முக்கியமான காரணமே தமிழ் சார் தான். அவர் மேல் இருந்த நம்பிக்கை தான்.

கதையை முழுவதுமாக என்னிடம் முன்னாடியே கொடுத்துவிட்டார்கள். என்னிடம் என்ன கொடுத்தார்களோ அதைத் தான் படத்திலும் எடுத்திருக்கிறார்கள்.

கும்கி படத்தின் கதையை வெறும் பத்து நிமிடம் தான் பிரபுசாலமன் சார் என்னிடம் சொன்னார். அந்த தாக்கத்தை அப்படியே கொண்டு வந்திருந்தார். ஆனால், இந்த படத்திற்கு ஷூட்டிங் முன்னாடியே எனக்கு ஃபுல் ஸ்கிரீப்டையும் கொடுத்துவிட்டார்கள். ஸ்கிரீப்டில் என்ன இருந்ததோ எந்த வித மாற்றமும் இல்லாமல் அப்படியே எடுத்துவிட்டார் இயக்குனர்.

சிறை படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் ஒரு நல்ல படத்தில் என் மகனும் இருக்க வேண்டும் என்று கூறினார். அதுவே நல்ல விஷயமாக எனக்கு பட்டது.

வேறு மாதிரியான படத்தில் நாம் இருக்க வேண்டும் என்று எண்ணி சென்றது தான் கும்கி. ஒரு யானை பாகன், ஒரு யானை இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு தான் படத்தின் கதை. படம் எடுப்பதற்கு முன் இது மட்டுமே எனக்கு தெரியும். அதோட வெற்றியோ மிகப்பெரியது.

முன்னாடியெல்லாம் ஒரு படத்தில் பெரிய பெரிய டயலாக் வைத்து படத்தினை இயக்கியிருப்பார்கள். ஆனால், இந்த காலகட்டத்தில் அப்படியெல்லாம் டயலாக் வைத்து சீன்களை எடுத்தால், போனை எடுத்து பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த படத்தின் மீது இருக்கும் சுவாரஸ்யமும் போய் விடும்.

இப்ப இருக்கிற ஆடியன்ஸுக்காக தான் நாம படம் பண்றோம். படையப்பா ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறது. அந்த டைம்ல தியேட்டர்ல பார்க்காதவங்க, இப்ப போய் பாக்குறாங்க அந்த படத்தை கொண்டாடுறாங்க.

நான் நடிச்ச அனைத்து படங்களுமே பிடிச்சிதான் பண்ணேன். சில படங்கள் எனக்கே பிடிக்காமல் இருக்கலாம். அத பத்தி பேச விரும்பல. இறங்கிட்டா முழு உழைப்பையும் கொடுக்கனும்னு நினைப்பேன். அப்படிதான் என்னோட படத்தில் நானும் என்னோட முழு உழைப்பையும் கொடுப்பேன்.

ரிலீஸுக்கு முன்னாடி கும்கி படம் ப்ளாப்ன்னு சொன்னவங்க எல்லாருமே, ரிலீஸானதுக்கு அப்புறமா வந்து படம் ப்ளாக்பஸ்டர்னு கட்டிபிடிச்சவங்கள்ளாம் இருக்காங்க.

இப்பகூட, சிறை நல்லா வந்திருக்கு. தியேட்டர் வந்ததுக்கு அப்புறம் தான் அதோட ரிசல்ட் நமக்கு தெரியும். இவங்கள மாதிரி இருக்கணும் அவங்கள மாதிரி இருக்கணும்னு நான் நினைச்சதும் இல்ல. நான் எப்போதுமே வித்தியாசமா எதாவது பண்ணனும்னு நினைப்பேன். வித்தியாசமா ட்ரை பண்டறதுல ரிஸ்க் கொஞ்சம் அதிகம் தான். இருந்தாலும் நான் அதை முதல்ல இருந்தே பண்ணிட்டு தான் இருக்கேன். அதுவும் எனக்கு பழகிடுச்சி. ” என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button