Spotlightசினிமா

ஒருவழியாக ஹீரோவை கண்டுபிடித்த விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் என பல மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், படத்தில் யார் ஹீரோ என்ற கேள்விக்கு பல நாட்கள் விடை தெரியாமல் இருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, படத்தின் ஹீரோ இவர்தான் என்று படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜிகேஎம் தமிழ் குமரன் கூறும்போது, “நல்ல கதைகளை எங்களின் தயாரிப்பு நிறுவனம் எப்பொழுதும் ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், ஜேசன் சஞ்சய் கதை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் புதிதாகவும் இருந்தது. குறிப்பாக, அந்தக் கதையில் பான் இந்தியா படத்திற்கான களம் இருப்பதை உணர்ந்தோம். ‘நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்’ என்ற மையக்கருவை சுற்றிதான் படம் நகரும். தனது திறமையான நடிப்பால் சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.

படத்தின் தொழில்நுட்பக் குழு பற்றி கேட்டபோது, “படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் மற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினரும் பணிபுரிய அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவோம். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button