Spotlightஇந்தியாசினிமா

ஏழைகளின் உயிரைக் காத்த நடிகர் சோனு சூட்டுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள்!

சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனு சூட். இவர், பிரபுதேவா நடித்த தேவி படத்திலும் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஹாட் டாப்பிக் இவர் மட்டும் தான். பல்வேறு ஊர்களில் சிக்கிய ஏழை, எளிய மக்களை அவர்களது சொந்த ஊருக்கு தனது செலவில் அனுப்பி வைத்தார்.

பஸ், கார், விமானம் என பல வழிகளில் அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் யாரேனும் படிப்புக்கென்று உதவி கேட்டால் முதல் ஆளாக வந்து நிற்கிறார் சோனு சூட்.

உதவுவதற்காக தனது வீட்டினையும் வங்கி ஒன்றில் அடமானம் வைத்துள்ளார். இவரது தன்னலம் கருதாத சேவையை கெளரவிக்கும் விதமாக தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டில் அவரது ரசிகர்கள் அவருக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். இது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button