
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் வீட்டிலேயே பலர் முடங்கி கிடக்கும் சுழல் உருவாகி உள்ளது.
தங்களது அன்றாட தேவைக்குக் கூட அவர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல, அமைப்பினர் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
நடிகர் விஷால் ரசிகர் மன்றம் சார்பில் அவரது ரசிகர்கள் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
அதன்படி, புரட்சி தளபதி விஷால் மக்கள்நல இயக்கத்தின் சார்பில் வட சென்னையில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பகுதி செயலாளர் யுவராஜ் இதை வழங்கினார்.
Facebook Comments