உலகளாவிய வீடியோ ஆன் டிமாண்ட் சேவையான ‘Viu’ இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் திறமைகளை அடையாளம் காட்ட இருக்கிறது.
Viu ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் உட்பட 15 சந்தைகளில் 30 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கம் கொண்ட OTT வீடியோ சேவை ஆகும். உலகளாவிய Viu Originalsல் 70 தலைப்புகள் மற்றும் 900+ எபிசோட்களை 2018 ஆம் ஆண்டின் முடிவில் உள்நாட்டில் உற்பத்தி செய்யும். அதில் 30 Originals இந்தியாவில் மட்டுமே உருவாக்கம் செய்யப்பட்டவை.
வளர்ந்து வரும் பிராந்திய மொழி உள்ளடக்கத்தால், இந்நிறுவனம் அதன் நூலகத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. உள்ளூர் சந்தையின் உள்ளடக்கங்களோடு, அழுத்தமாக கால் பதித்துள்ள Viu நிறுவனம், இந்த தலைமுறைக்கான உள்ளடக்கத்தோடு தமிழ்நாட்டில் நுழைகிறது. நான்கு புதிய பிரீமியம் டிஜிட்டல் நிகழ்ச்சிகள், குறுகிய வடிவ உள்ளடக்கம் மற்றும் திரைப்படங்கள் மூலம் புதிய உள்ளடக்க அலையை உருவாக்கி, டிஜிட்டல் பொழுதுபோக்கு எல்லையை மறுவரையறை செய்ய முயற்சி செய்துள்ளது. காமெடி, ரொமாண்டிக் காமெடி, ட்ராமா வகை என வெவ்வேறு வகையிலான, பல்வேறு கதைகளை கொண்ட நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது.
வியூ எப்போதும் உள்ளூர் சந்தையில் இருக்கும் பங்குதாரர்களுடன் இணைந்து, பார்வையாளர்களுக்கு சிறந்ததை வழங்குவததை வாடிக்கையாக கொண்டுள்ளது. தமிழ் மொழியில் தங்கள் நிறுவனத்தை தொடங்கும்போது அதில் வரும் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழின் சாரம் குறையாமல் இருக்க, தமிழர்களால் மட்டுமே இயக்கப்படுகின்றன.
Viu தங்கள் நோக்கங்களை உலகளாவிய பரம்பரையுடன், உள்ளூர் நிபுணத்துவத்துடனும் நிறைவேற்ற தென்னிந்திய சினிமாவின் முன்னோடியும், தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் மிகப்பெரிய விநியோகஸ்தர்களான AP Internationals உடன் கைகோர்க்கிறது. இந்த ஒத்துழைப்பினூடாக, Viu தமிழ் பொழுதுபோக்கு துறையில் உள்ள சில சிறந்த புத்திசாலி மனிதர்களுடனும் பணி புரிகிறது.
உறியடி என்ற வெற்றிப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறியப்பட்ட சமீர் பரத் ராம், இரண்டு தொடர்களை தயாரிக்கிறார். அவரது சொந்த நிறுவனமான ‘சூப்பர் டாக்கீஸ்’ உடன் இணைந்து ‘கல்யாணமும் கடந்து போகும்’ என்ற தொடரை நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாரிக்கிறார். எழுத்தாளரும், திரு திரு துறு துறு திரைப்படத்தின் இயக்குனருமான JS நந்தினி இயக்கத்தில் ‘Madras Mansion’ என்ற தொடரை Make believe production நிறுவனத்துடன் இணைந்தும் தயாரிக்கிறார். மேலும் அவர்களோடு இணைந்து ‘நிலா நிலா ஓடிவா’ என்ற பெயரில் தமிழ் பார்வையாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான கருத்தை வழங்க இருக்கிறார்கள்.
இறுதியாக, அதன் நான்காவது நிகழ்ச்சியாக தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தயாரிப்பாளர் ஊடக நிறுவனமான ‘TrendLoud’ உடன் இணைந்து ‘Door No. 403’ என்ற நகைச்சுவையான, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நையாண்டி நிகழ்ச்சியை வழங்குகிறார்கள்.
உள்ளூர் திறமை, கூட்டு வியூகம் மற்றும் நான்கு புதிய நிகழ்ச்சிகளின் பிராந்திய உள்ளடக்கம், வலுவான முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும், Viu India உள்ளூர், உலகளாவிய தமிழ் பார்வையாளர்களை ஈர்க்கும்.
24 ஜூலை 2018 முதல் Viu Tamil அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட இருக்கிறது.
Viu பற்றி:
Viu ஒரு PCCW மற்றும் Vuclip மூலம் நடத்தப்படும் முன்னணி OTT வீடியோ சேவை. ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், ஓமன் ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. புதிய மற்றும் உள்ளூர்மயமான பிராந்திய மற்றும் உள்ளூர் பிரீமியம் டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் தனித்துவமான உள்ளடக்கம் மூலம் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான நுகர்வோர்களை கொண்டிருக்கிறது. உலகளாவிய உற்பத்தித் தரத்துடன், Viu Originals இலகுவான கதைகளை வெளிப்படுத்துகின்றன. மேலும் உள்ளூர் திறமைகள் உலக அரங்கில், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. Viu App ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் ப்ளேவில் இலவசமாக ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் டேப்லட்களில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. இணையத்திலும் www.viu.com இல் இலவசமாக கிடைக்கிறது.