அறிமுக இயக்குனர் ஆன்றோ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “விழி அருகே”.
இக்காலகட்டத்தில், பெண்கள் தான் ஆசைப்படும் வாழ்க்கை கிடைக்காமல் அதற்கு எதிர்மாறான வாழ்க்கை அமைந்தால் அதனால் ஏற்படும் இன்னல்கள் என்னென்ன என்பதை மிகவும் வாழ்வியல் கலந்த கதையோடு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆன்றோ.
பெண்களை மையப்படுத்திய படம் என்பதால், அக்கதாபாத்திரமாகவே வாழ்வதற்கு ஏற்றவாறு சாஜிதா என்பர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜெகதீஷ் கதையின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பறவை சுந்தராம்பாள் நடித்திருக்கிறார்..
இந்த படத்தை சகாயமாதா எக்ஸிம் கம்பெனி தயாரித்துள்ளது.
ஒளிப்பதிவு – ரஹீம் பாபு
இசை – விஜய் தேவசிகாமணி
பாடல் வரிகள் – ரமணிகாந்தன்
எடிட்டிங் – சுந்தர்
விரைவில் இப்படத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.