Spotlightசினிமா

மிர்ச்சி விஜய் நடிக்கும் ‘Wife’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

வெற்றிகரமாக நிறைவு பெற்ற ‘Wife’ படத்தின் படப்பிடிப்பு

ஒலிம்பியா மூவீஸின் தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமார் உலகளவில் பார்வையாளர்களைக் கவர்ந்த ‘டாடா’ போன்ற பொழுதுபோக்கு மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது ‘Wife’ என்ற படத்தை தயாரித்துள்ளது ஒலிம்பியா மூவிஸ். மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

ஹேமநாதன் ஆர் இயக்க, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு கே.ஏ. சக்திவேல் மற்றும் சிவா ஷங்கர் தயாரிப்பு வடிவமைப்பு, மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், கல்யாணி நடராஜன், விஜய் பாபு, லல்லு, கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர். குறித்த நேரத்தில் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில், ஒட்டுமொத்த படக்குழுவினரும் கேக் வெட்டி கொண்டாடினர்.

படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி இந்த வார இறுதியில் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது. ஏற்கனவே போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. படத்தை திட்டமிட்டபடி வெளியிட படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ‘Wife’ படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Facebook Comments

Related Articles

Back to top button