
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் சமீபத்தில் நித்யானந்தாவை கலாய்த்து யோகி நடித்திருந்த எபிசோட் மிகவும் வைரலானது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்த காமெடியின் தொடர்ச்சியாக தற்போது விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (பப்ஜி) என்ற படத்திலும் நித்யானந்தா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் யோகி.
படப்பிடிப்பில், “நோ சூடு நோ சுரணை’ என்ற அந்த டயலாலாக்கை படமாக்கும் போது படக்குழுவினர் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். இப்படத்தில், இந்த கதாபாத்திரம் மிகவும் அதிகமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதிகட்டத்தை எட்டியுள்ள இதன் படப்பிடிப்பு, விரைவில் திரைக்கு வரும் என இயக்குனர் கூறியுள்ளார்.
Facebook Comments