அட்டகத்தி, மெட்ராஸ் மற்றும் கபாலி படங்களுக்கு பிறகு அதீத எதிர்பார்ப்பில் ரஜினி நடிப்பில் உருவான ‘காலா’ என்ற தனது இயக்கத்தை கொடுத்தார் இயக்குனர் ரஞ்சித்.
பல விமர்சனங்களையும் மீறி நல்ல ஒரு வெற்றியைத் தேடிக் கொடுத்தது ‘காலா’.
இந்நிலையில் ரஞ்சித்தின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும், எந்த ஹீரோ நடிப்பார் என்பது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கபாலி’ ரிலிஸின் போதே விஜய்க்காக கதை எழுதுமாறு பிரபல தயாரிப்பாளர் ரஞ்சித்திடம் கூறியிருக்கிறார். அவரும் விஜய்க்காக கதை எழுதிய போது தான், மீண்டும் ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதனால், ரஞ்சித் அடுத்ததாக விஜய்யை வைத்து படம் இயக்குவார், என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாலிவுட்டில் இயக்குநர் ரஞ்சித்துக்கு மவுசு கூடியிருக்கிறதாம். அங்கிருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் படம் பண்ணி கொடுக்குமாறு ரஞ்சித்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறதாம்.
இது குறித்து ரஞ்சித்திடம் கேட்டதற்கு, “ஆமாம், பாலிவுட் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. அப்படி முடிவானால் நானே அறிவிப்பேன்.” என்று கூறினார்.