Spotlightசினிமா

யோகி பாபுவின் 300வது படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’ – நவம்பர் 27ல் திரையரங்குகளில் ரிலீஸ்!

நடிகர் யோகி பாபுவின் 300வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழு புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாகவும், அனாமிகா மஹி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். காளி வெங்கட், அருள்தாஸ், மைனா நந்தினி, சென்ட்ராயன், லெனின் பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கஷ்டப்பட்டு வாங்கிய வாகனம் திருடுபோனதைத் தொடர்ந்து, அதனைத் தேடும் இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகளையும், அதன் பின்னணியில் இயங்கும் வாகனத் திருட்டு மாஃபியாவையும் மையமாகக் கொண்டு நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

ஏற்கெனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இப்படத்தின் டீசர் கவனம் பெற்ற நிலையில், தற்போது நவம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button