செய்திகள்

அதர்வா படத்தில் எருமசாணி ஹரிஜா!

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடிக்க பெயரிடப்படாத ஒரு படம் உருவாகி வருகிறது. படத்தில் அதர்வா போலீஸாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹரிஜா. இவர் யூடியூப்பில் எருமசாணி என்ற என்ற சேனல் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தவர்.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஹரிஜா பேசுகையில், “சினிமாவில் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்தபொழுது தான் இந்த படம் எனக்கு கிடைத்தது. சுமார் இரண்டு வாரங்கள் எனது படப்பிடிப்பு நடந்தது. சாம் ஆண்டன் மற்றும் அதர்வாவுடன் பணியாற்றியது மிகவும் அற்புதமான அனுபவமாகும். படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் மிகவும் உற்சாகமாக இருந்தது. எனது கதாபாத்திரத்தையும் இந்த படத்தையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ரசித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன் ”. என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button