Spotlightவிமர்சனங்கள்

யசோதா விமர்சனம் 3.5/5

ரி மற்றும் ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா, வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் யசோதா.

ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த சமந்தா, தாய் தந்தை இல்லாமல் வளர்கிறார். தங்கையே உலகம் என வாழ்ந்து வரும் சமந்தா, உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்.

அவசரமாக பணம் தேவைப்பட, குழந்தை பெற்றெடுக்கும் வாடகைத் தாயாக செல்கிறார் சமந்தா.

ஒருமிகப்பெரும் நிறுவனம் கர்ப்பிணியாக இருக்கும் சமந்தாவை அவர்கள் இடத்திற்கு அழைத்துச் செல்கிறது. அங்கு, ஏற்கனவே வாடகைத் தாயாக பல பேர் இருக்க, நிறைய மர்மமான சம்பவங்கள் நடைபெறுகிறது அங்கு.

அது என்னென்ன சம்பவம்..? சமந்தா என்ன செய்தார்.? சமந்தா யார்.? என்ற கேள்விகளுக்கெல்லாம் இரண்டாம் பாதியில் பதிலளித்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.

இதுவரை சமந்தா நடித்த படங்களிலே ஒன் ஆப் தி பெஸ்ட் என்றே யசோதா படத்தைக் கூறலாம். ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றிலும் அதிரடி காட்டியிருக்கிறார். எமோஷன்ஸ் காட்சியிலும் அழகிலும் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் சமந்தா.

முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கும் இது ஒரு திருப்புமுனை படமாக அமைந்திருக்கிறது. மிரட்டலான தோற்றத்தில் அசர வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறது.

மணிஷர்மாவின் இசையில் பின்னணி இசை கதையோடு நகர்ந்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. எம் சுகுமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது.

கதை, திரைக்கதையில் மிகவும் கச்சிதமாக செயல்பட்டிருக்கிறார்கள் இயக்குனர்கள். வாடகை தாய் மூலம் நடக்கும் ஒரு சில அசம்பாவிதங்களையும் தோலுரித்திருக்கிறார்கள். காட்சிகள் ஒவ்வொன்றையும் பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார்க்ள்.

இருவேறு பக்கத்தில் நகரும் இரு கதைகளும், ஒரு இடத்தில் சங்கமிக்கும்போது கதையின் போக்கு அசுர வேகம் கொள்கிறது.

சமந்தாவின் கதாபாத்திரத்தை இன்னும் சற்று வலுவாக கொடுத்திருந்தால் யசோதா வீறு கொண்டு நடைபோட்டிருக்கும். இருப்பினும்,

யசோதா – அசராதவள்…

Facebook Comments

Related Articles

Back to top button