
சிங்கம் என்றாலே காட்டுக்கு ராஜா தான். காட்டை ஆண்டு கொண்டிருக்கிற பெரிய சிங்கம்(முஃபாஸா), பிறந்த தனது குட்டி சிங்கம் (சிம்பா) தான் வருங்கால ராஜா என்று அனைத்து விலங்குகளின் முன்னிலையிலும் அறிவித்து விடுகிறார்.
நமக்கு அந்த பதவி கிடைக்கவில்லையே என்று கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் பெரிய ராஜாவின் தம்பி சிங்கம்( ஸ்கார்).
பெரிய ராஜாவையும்(முஃபாஸா) சிம்பாவையும் கொன்று அந்த காட்டை ஆள நினைக்கிறார் ஸ்கார்…
இறுதியாக, யார் வென்றது..?? காட்டை ஆளப்போவது யார்..??? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்திற்கு உயிர் பின்னனி குரல் கொடுத்தவர்கள் தான். சித்தார்த் (சிம்பா), அரவிந்த்சாமி (ஸ்கார்), ரவிஷங்கர் (முஃபாஸா), ஐஸ்வர்யா ராஜேஷ் (நாளா), ரோகிணி, சிங்கம் புலி (டிமோன்), ரோபோ சங்கர் (பும்பா), மனோபாலா என இவர்கள் படத்தில் வரும் உயிரினங்களுக்கு குரல் கொடுத்தவர்கள்.
மனோபாலா, ரோபோ சங்கர், சிங்கம்புலியின் குறும்புத்தனமான குரல்களுக்கு திரையரங்கமே சிரிப்பலைகளில் அதிர்கிறது.
ஒரிஜினல் விலங்கு போன்ற காட்சியமைப்பு படத்திற்கு பெரிய பலம். சிறு வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசிக்கும் படியாக தான் இந்த படம் அமைந்துள்ளது.
இந்த வார விடுமுறையை திரையரங்குகளில் சென்று கொண்டாட ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம் இந்த ‘The Lion King’.
தி லயன் கிங் – நல்ல ஒரு பொழுதுபோக்கு படம்… ரசிக்கலாம்..





