Spotlightசினிமா

பஜன் சாம்ராட்; கலர்ஸ் தமிழின் தெய்வீக இசை நிகழ்ச்சி!

புதிய வாரம் தொடங்குகின்ற தருணத்தில், தனது பிரபலமான தெய்வீக ரியால்டி நிகழ்ச்சியான பஜன் சாம்ராட்-ல் ஆழ்ந்த இரசனைக்குரிய சிறப்பான நிகழ்வுகளின் தொகுப்பை வழங்க, இம்மாநிலத்தின் மிக இளமையான பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ் தயார் நிலையில் இருக்கிறது.

மிக நுட்பமான பஜனை பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி திறனையும், இசை மேதைமையையும் பிற போட்டியாளர்களைவிட சிறப்பாக வெளிப்படுத்துவதன் மூலம் இந்த வார எபிசோடுகள் இந்த ரியால்டி போட்டி நிகழ்வை இன்னும் சுவையானதாகவும், ஆர்வமூட்டுவதாகவும் ஆக்கும் என்பதில் ஐயமில்லை. புகழ்பெற்ற கர்நாடக சங்கீத விற்பன்னர்களான டாக்டர் ஆர் கணேஷ் மற்றும் மஹதி இந்த நிகழ்வில் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களுக்கு வழிகாட்டுதலையும், வழங்கவிருக்கின்றனர்.

இசையும், தெய்வீகமும் சங்கமமாகின்ற இந்த பஜன் சாம்ராட் நிகழ்ச்சியின் இந்த வார எபிசோடுகளை 2021 பிப்ரவரி 22 திங்கள் முதல் 24 புதன்கிழமை வரை காலை 7:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் தவறாது காண்பதற்கான மூன்று காரணங்கள் இதோ கீழே:

தாய்மொழியான தமிழில் பஜனைப் பாடல்கள் – இப்போட்டியில் தற்போது 10 குழுக்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் பஜனை பாடல்களை சுவைபட வழங்குவது, அவற்றிற்கான நுட்பங்களும் மற்றும் ஒத்திகளும் உச்சத்தை எட்டுமாறு செய்யும் என்பதில் ஐயமில்லை. ஒரு பிரத்யேக சுற்றில் பிரபல கவிஞரான கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் இயற்றப்பட்டு, இசையமைக்கப்பட்ட தமிழ் பஜனை பாடல்களை பாடி கொண்டாடுவது இந்த வார நிகழ்வுகளில் நிச்சயமாக சிறப்பான அம்சமாக இருக்கும்.

பிரமாதமான இசைத்திறன் – இந்த போட்டியில் வெற்றிவாகை சூடுவதற்காக மற்றவர்களுக்கு எதிராக ஒவ்வொரு குழுவும், தங்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் என்பதால், இந்த வாரம் ஒளிபரப்பாகிற எபிசோடுகள் ஒரு புதிய தெய்வீக உலகிற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம். தங்களது தனிப்பட்ட உத்தியோடு ஒவ்வொரு குழுவாலும் வழங்கப்படுகிற பாடல்களும், இசையும் இந்நிகழ்ச்சியின் சுவையையும், தரத்தையும் மிகவும் உயர்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தும்.

தெலுங்கு மொழியில் பஜனைப் பாடல்கள் – தங்களுக்கு நன்கு பரிச்சயமான இடத்தையும் கடந்து தங்களது திறன்களை இன்னும் ஆணித்தரமாக வெளிப்படுத்தி நடுவர்களை தன்வசப்படுத்துவதற்காக இக்குழுக்கள் மிக நுட்பமான தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளையும் மற்றும் பிற தெலுங்கு பஜனை பாடல்களையும் பாடவிருக்கின்றனர்.

கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது. சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO553).

Facebook Comments

Related Articles

Back to top button
Close
Close