Spotlightசினிமா

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ பட போஸ்டர் – படக்குழுவின் வித்தியாசமான முயற்சி!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டர், புதுச்சேரி நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

படக்குழுவின் ஏற்பாட்டில் நடுக்கடலுக்குச் சென்ற மீனவர்கள், தங்களது கைகளில் ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டரை ஏந்தி வெளியிட்டனர். வழக்கமான போஸ்டர் வெளியீடுகளில் இருந்து மாறுபட்ட இந்த முயற்சி கவனம் பெற்றுள்ளது.

இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜி.எம். குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, அமுதவாணன், அப்புக்குட்டி, திவாகர், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சீயோன் ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு ராஜா மற்றும் பாலா இசையமைத்துள்ளனர். மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரித்துள்ளார்.

‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button