
ஆர்யா தனது 30வது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இயக்குநர் பா.ரஞ்சித்துடன் தான் குத்துச்சண்டை செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘சல்பேட்டா பரம்பரை’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நடிகர் ஆர்யா ககூறும்போது, ‘ட்ரீம் கம் ட்ரூ ப்ராஜெக்ட் என் அன்பு நண்பன் கலையரசன் மூலம் இது சாத்தியமானது. பசுபதி, சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஜான் கோக்கன் மற்றும் ஷபீர் அனைவரும் புத்திசாலிகள். அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியாகும் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ளார்.
மேலும், இந்த அற்புதமான சிறந்த விளையாட்டுப் படத்திற்காக இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு நன்றி. முரளியின் கேமரா கைவண்ணம் இப்படம் சிறந்ததாக வருவதற்கு எங்களை விட மிகவும் வேகமாக செயல்பட்டார். இவை எல்லாவற்றையும் மீறி இப்படம் சிறந்த காட்சி விருந்தாக அமைந்ததற்கு எனது தயாரிப்பாளர் கே 9 ஸ்டூடியோஸ் தான் காரணம். அவர்கள் இல்லையென்றால், இதுபோன்ற படத்தை கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது. இவ்வாறு நடிகர் ஆர்யா கூறினார்.





