
2023-24 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று தமிழகம் முழுவதும் வெளியானது.
இந்த தேர்வில் பட்டுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியா மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
பட்டுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள Laurel உயர்நிலைப்பள்ளியில் தனசேகரன் – லதா இவர்களின் மகளான ஓவியா, பத்தாம் வகுப்பு தேர்வில் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று பட்டுக்கோட்டை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பிடித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்களும் , கணக்கு, அறிவியில் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
பட்டுக்கோட்டையின் தலைமகளான ஓவியாவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Facebook Comments